Department of Tamil

இக்கல்லூரியின் தமிழ்த்துறை 1954 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டுத் தொடர்ந்து இயங்கி வருகிறது. இத் துறையில் பணியாற்றி வரும் பேராசிரியர்கள் நீண்ட பணி அனுபவமும் அர்ப்பணிப்பு உணர்வும் அமையப்பெற்றவர்கள்.

இக்கல்லூரியின் தமிழ்த்துறை மிகச் சிறந்த ஆய்வு அறிஞர்கள் பலர் பணியாற்றிய பெருமையுடையது. அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்களாய் பேரா அ. முத்துசிவன், முனைவர் வ.சுப. மாணிக்கனார், முனைவர் இரா. சாரங்கபாணி, முனைவர் சிவகுருநாதன், பேரா அமிர்தலிங்கனார், பேரா. தேசிகனார், முனைவர் அ. விசுவநாதன் பேரா கே. முருகப்பன், முனைவர் அபிபுல்லா, முனைவர் லெட்சுமணப் பெருமாள், முனைவர் சதாசிவம், முனைவர் சுப. கதிரேசன், பேரா ம.கார்மேகம் முனைவர் க. காந்தி போன்றோர் அமைவர்.

அழகப்பா கலைக் கல்லூரியிலிருந்த முதுகலை மற்றும் ஆய்வு வகுப்புகளை அடிப்படையாகக் கொண்டு அழகப்பா பல்கலைக் கழகம் புதிதாகத் தொடங்கப்பட்டதற்குப் பின் இக்கல்லூரியின் தமிழ்த் துறை இளங்கலை வகுப்புகளுடனே இயங்கி வந்தது. பிற்காலத்து இத்துறைப் பேராசிரியர்களின் நெடிய அரிய முயற்சியின் விளைவாக 2004 இல் முதுகலை படிப்பும், ஆய்வுப் படிப்பும் தொடங்கப் பெற்றன. முதுகலை மாணவர்களையும் ஆய்வு மாணவர்களையும் தரம்வாய்ந்த ஆய்வாளராக உயர்த்தி வந்த இத்தமிழ்த் துறை 2012 முதல் ஆய்வு மையமாக வளர்ச்சி பெற்றது. தற்பொழுது இ;வ் ஆய்வு மையத்தில் பத்து முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர்களும், ஏழு ஆய்வு நெறியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் கீழ் ஆய்வாளர்கள் இலக்கணம், சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், காப்பிய இலக்கியம், சிற்றிலக்கியம், நவீன இலக்கியம் தொடர்பான பல்வேறு இலக்கிய வகைமைகள் குறித்து பகுதி நேர, முழு நேர ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதி நல்கையுடன் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டுவரும் ஆய்வாளர்களும் இத்துறையில் ஆய்வினை மேறn; காண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்துறையில் பணியாற்றிய பேராசிரியர்கள் பல்கலைக் கழகத் துணை வேந்தராகவும், நாடு போற்றும் நல்ல தமிழ் அறிஞர்களாகவும் விளங்கியிருக்கின்றனர்.

இத் துறையில் பயின்ற மாணவர்கள் பல்வேறு துறைகளில் பணி வாய்ப்புப் பெற்று இக்கல்லூரியின் தமிழ்த்துறைக்குப் பெருமை சேர்த்துள்ளனர். இத்துறையின் ஆற்றல்சால் மாணவர்கள் பலர் எழுத்தாளராகவும், கவிஞராகவும். நிழற்படக் கலைஞராகவும், விளையாட்டு வீரராகவும் பரிணாமம் பெற்றுள்ளனர்.

தமிழ் கூறும் நல்லுலகிற்குத் தமிழாய்ந்த அறிஞர்களையும் படைப்பிலக்கிய வாதிகளையும் உருவாக்கித் தந்த இக்கல்லூரியின் தமிழ்த் துறை தனது, நெடிய பயணத்தைப் பெருமையோடும் சிறப்போடும் தொடர்ந்து குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

இத்துறையின்கீழ் நடைபெறும் வகுப்புகள்:

வ.எண் வகுப்பு தொடக்கப் பெற்ற ஆண்டு
1. பகுதி- 1 மொழிப்பாடம் 1947
2. பி.ஏ., தமிழ் 1954
3. எம்.,ஏ., தமிழ் 1958-1985 மற்றும் 2004 முதல்
4. எம்.பில் தமிழ் 1964-1970
5. பி.எச்.டி முழுநேரம் மற்றும் பகுதி நேரம் 2012

Department of Tamil

Facilities